CAMP

பாதுகாப்பான இணைய சூழலின் நிலையான நன்மைகளை அடைவதற்கும், இணைய வெளியினை பாதுகாப்பாக வைத்திருக்க உறுப்பினர்கள் கூட்டு நடவடிக்கை எடுக்கக்கூடிய ஒரு தளமாக செயற்படுவதனையும் நோக்கமாக கொண்டு, பரஸ்பர முன்னேற்றத்திற்கான சைபர் பாதுகாப்பு கூட்டணி (CAMP) கொரிய குடியரசின் அரசாங்கத்தால் தொடங்கப்பட்டது. இது 29 நாடுகளைச் சேர்ந்த 40 அமைப்புக்களுடன் கொரியாவின் சியோலில் ஜூலை 11, 2016 அன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது. உறுப்பினர்களின் ஒட்டுமொத்த இணைய பாதுகாப்பை உயர்த்துவதற்கான பிணைய தளமாக CAMP செயற்படுகிறது. உறுப்பினர்கள் பரஸ்பர வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கும், உலகளாவிய இணைய பாதுகாப்பு மேம்பாட்டிற்கு பங்களிப்பதற்கும் மேம்பாட்டு அனுபவங்களையும் இணைய பாதுகாப்பின் போக்குகளையும் பகிர்ந்து கொள்கின்றனர்.

2019 ஆம் ஆண்டின் நிலவரப்படி, CAMP என்பது 45 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 59 உறுப்பினர் அமைப்பாகும். இந்த எண்ணிக்கை தொடர்ந்து வளர்ந்து வருகிறது. இணைய பாதுகாப்பு தொடர்பான அரச நிறுவனங்கள், பொது மற்றும் இலாப நோக்கற்ற நிறுவனங்கள் CAMP உறுப்பினர்களுக்கு தகுதியானவை ஆகும்.

இலங்கை CERT | CC அதன் தொடக்கத்திலிருந்தே CAMP இன் உறுப்பினராக இருந்து வருகின்றது. மேலும் 2016 முதல் இந்த சமூகத்தின் நடவடிக்கைகளில் முழுமையாக ஈடுபட்டுள்ளது. இது தவிர, இலங்கை CERT | CC ஆனது CAMP இன் செயற்பாட்டுக் குழு உறுப்பினராக பணியாற்ற 2018ம் ஆண்டிலிருந்து அழைக்கப்பட்டது.

CAMP உடனான செயற்பாடுகள்

வருடாந்த பொதுக் கூட்டம்

CAMP இனது வருடாந்த பொதுக் கூட்டம், உறுப்பினர்களுக்கு இணைய பாதுகாப்பு சமூகத்தின் முன்னணி நிபுணர்களால் வழங்கப்பட்ட பரந்த அளவிலான விளக்கக்காட்சிகளில் கலந்து கொள்ள வாய்ப்பளிக்கின்றது. வலையமைப்பு, ஒத்துழைப்பு மற்றும் தொழில்நுட்ப தகவல்கள் மற்றும் அனுபவத்தைப் பகிர்வதற்கான வாய்ப்புகளையும் AGM உருவாக்குகின்றது.

பிராந்திய மன்றங்கள்

பிராந்திய மன்றங்களில், பிராந்திய உறுப்பினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய இணைய பாதுகாப்பு தொடர்பான தனிப்பயனாக்கப்பட்ட உள்ளடக்கத்தை CAMP வழங்குகின்றது. இதுவரை CAMP ஆனது தென்கிழக்கு ஆசியா, கிழக்கு ஆசியா, மேற்கு ஆபிரிக்கா, மத்திய ஐரோப்பா மற்றும் மத்திய அமெரிக்காவில் பிராந்திய மன்றங்களை நடத்தியுள்ளது.

CAMP செயற்பாட்டுக் குழுவின் உறுப்பினர்

உறுப்பினர் செயலாக்கம், வருடாந்த கூட்டங்கள், பிராந்திய மன்றங்கள் மற்றும் தகவல் பகிர்வு நடவடிக்கைகளுக்கான முடிவெடுக்கும் அமைப்பாக CAMP செயற்பாட்டுக் குழு செயல்படுகிறது. CAMP இன் வளர்ச்சிக்கான கொள்கைகள் மற்றும் உத்திகளை நிறுவுவதற்கும் இது பொறுப்பாகும்.

CAMP இன் செயற்பாட்டுக் குழுவிற்கு 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற வருடாந்த பொதுக் கூட்டத்தில், இலங்கை CERT | CC தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக 2019-2020 காலப்பகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டது. மற்றைய செயற்பாட்டுக் குழு உறுப்பினர்களாக கொரியா தகவல் பாதுகாப்பு நிறுவனம் (KISA), CERT-MU(மொரீஷியஸ்), ஈக்வடார் சைபர் பாதுகாப்பு சங்கம், மாநில தொழில்நுட்ப சேவை (STS)-கஜகஸ்தான், தொழில்நுட்ப உதவி மையம் - உஸ்பெகிஸ்தான், உகாண்டா தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனம், பாதுகாப்பான இணைய மையம் (SIC) பிஜி, தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப ஆணையம் - துருக்கி மற்றும் அரபு ICT அமைப்பு ஆகியன உள்ளடங்குகின்றன.

தற்போது, CAMP செயற்பாட்டுக் குழுவின் உறுப்பினர் கூறு தொடர்பான செயல்முறைகள் மற்றும் நடைமுறைகளில் இலங்கை CERT | CC உடன் ICTA - துருக்கி ஆகியன முன்னணியில் உள்ளன.

தகவல் பகிர்வு

CAMP உறுப்பினர்களுக்கு அவர்களின் பொருளாதாரங்களில் இணைய பாதுகாப்பின் செயல்திறனை அதிகரிக்க பயனுள்ள தகவல்களை வழங்குவதற்காக CAMP ஒரு காலாண்டு செய்திமடலை வெளியிடுகிறது. சமீபத்திய நிகழ்வுகள், நிறுவன நடவடிக்கைகள் அல்லது அவர்கள் ஊக்குவிக்க விரும்பும் புதிதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட உத்திகள் போன்ற இணைய பாதுகாப்பு தொடர்பான தகவல்களை உறுப்பினர்கள் பகிரலாம். மேலும், சமீபத்திய இணைய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் / போக்குகள் பற்றிய செய்திகளை சுருக்கமாகவும், உறுப்பினர்களின் நலனுக்காக தேவைப்படும் போதும் CAMP ஆனது வெளியிடுகிறது. இத் தகவல்கள் மதிப்பீடு செய்யப்பட்டு, தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படையில் தொகுதிக்கு பரப்பப்படுகின்றன.

img